9 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை! முக ஸ்டாலின் உறுப்பினர் ஆனார்!

22 October 2019 அரசியல்
annalibrary.jpg

கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நூலகத்தின் உறுப்பினர் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகின்றது. விருப்பம் உள்ளவர்கள், தங்களுடையப் பெயர்களை நூலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கு நூலக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதால், பொதுமக்கள், கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ஆர்வமுடன் வந்து, பதிவு செய்து கொள்கின்றனர். மாணவர்களுக்கு 75 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

இன்று காலையில், திமுக தலைவர் முக ஸ்டலான் அவர்கள், கோட்டூர்புரத்தில் உள்ள நூலகம் சென்று, அங்குத் தன்னுடையப் பெயரினை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.

HOT NEWS