வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என, அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வானது, கொரோனா ஊரடங்கின் காரணமாக மறு தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பொறியியல் படிக்கின்ற மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஏற்கனவே, கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுவதாக இருந்த தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகள் விவகாரமானது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகமானது, கடந்த டிசம்பர் மாதமே, செமஸ்டர் தேர்விற்கு பணம் செலுத்துவதற்கான வலைதளப் பக்கத்தினை திறந்தது. மாணவர்களும் பெரும் குழப்பத்திற்கு மத்தியில், தேர்வுக் கட்டணம் செலுத்தினர். இந்நிலையில், வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை, செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என, அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது. இவை அனைத்தும், இணைய வழியில் நடைபெறும் எனவும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு தேர்வுகள் நடைபெறும் அறிவிக்கப்பட்டு உள்ளது.