கடைசி வாய்ப்பு! அரியர்ஸ் வச்சவங்க மிஸ் பண்ணாதீங்க! அண்ணா.பல்கலை. அறிவிப்பு!

16 March 2020 அரசியல்
annauniversity.jpg

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட, கல்லூரிகளில் படித்த மாணவ, மாணவிகள் தங்களுடைய அரியர்கள் முடிக்க கடைசி வாய்ப்பு ஒன்றினை அண்ணா பல்கலைக் கழகம் வழங்க உள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு தொடங்கி, 20 ஆண்டுகளாக தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ள மாணவர்கள் கடைசியாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்களுக்காக கடைசி அரியர்ஸ் தேர்வு நடத்தப்பட உள்ளது அண்ணா பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன.

இதனால், பழையப் பாடத்தினைப் பின்பற்றி பலரும் அரியர்ஸ் எழுதி வருகின்றனர். இதனால், நேர விரயமும், காலத் தாமதமும் ஏற்படுகின்றது. இனைக் கருத்தில் கொண்டு கடைசி வாய்ப்பினை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 13 முதல் 23ம் தேதி வரை, அரியர்ஸ் எழுத விரும்புபவர்கள், தேர்வுக் கட்டணத்தினை செலுத்தலாம்.

தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வு தான் 2000ம் ஆண்டு அரியர்ஸ் வைத்தவர்களுக்காக, கடைசியாக நடத்தப்படும் தேர்வு ஆகும்.

HOT NEWS