செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்19 வரை அவகாசம்! அண்ணா பல்கலைக்கழகம்!

05 September 2020 அரசியல்
annauniversity.jpg

செமஸ்டர் தேர்விற்கான கட்டணத்தினைச் செலுத்த, செப்டம்பர் 19ம் தேதி வரை, அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாப் பரவி வருகின்றது. இதனால், கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டியப் பல்கலைக் கழகத் தேர்வுகள் தற்பொழுது வரையிலும் நடைபெறாமல் உள்ளன. இதனைத் தொடர்ந்து, யூஜிசி அமைப்பானது, வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை வைத்து முடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தற்பொழுது செப்டம்பர் 3வது வாரத்தில், அண்ணாப் பல்கலைக் கழகம் உள்ளிட்டப் பல்கலைக் கழகங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், செப்டம்பர் 5ம் தேதிக்குள், செமஸ்டர் தேர்விற்கான கட்டணத்தினைச் செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாத மாணவர்களின் பெயர்களினை, பட்டியலில் இருந்து நீக்குவதாகவும் அண்ணா பல்கலைக் கழகம் கூறியது.

இதனை எதிர்த்து, மாணவர்கள் அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. இதனையொட்டி, வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி வரை, மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம் என அண்ணாப் பல்கலைக் கழகம் கூறியுள்ளது.

HOT NEWS