தேர்வு அட்டவணையினை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

16 September 2020 அரசியல்
annauniversity1.jpg

அண்ணா பல்கலைக் கழகம் இறுதி செமஸ்டர் தேர்விற்கான அட்டவணையினை, தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அரியர் மற்றும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த தமிழக உயர்கல்வித்துறையானது, இறுதி செமஸ்டர் தேர்வினை மட்டும் வைக்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகம் உட்பட தமிழகத்தின் பலப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் நடத்த உள்ள தேர்வு தேதியினை அறிவித்து உள்ளனர்.

அதன்படி, இறுதி செமஸ்டர் தேர்வானது செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்தத் தேர்வானது காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னர் 12 மணி முதல் 1 மணி வரையிலும், பின்னர் 2 முதல் 3 மணி வரையிலும், பின்னர் 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு நான்கு முறை என, பலப் பாடப்பிரிவுகளுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மேலும், இறுதி செமஸ்டரில் அரியர் வைத்த மாணவர்களுக்காக, விளக்கமான அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

HOT NEWS