பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்த டிசம்பர் மாதத்தில், நடப்புக் கல்வியாண்டிற்கான முதல் பருவத் தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், இறுதியாண்டு பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மட்டும் வருகின்ற டிசம்பர் 14ம் தேதி அன்று நடைபெறும் எனவும், இதறத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
மேலும், தேர்வுத் தேதிகள் அனைத்தும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. தற்பொழுது அரியர் தேர்வு ரத்துக் குறித்த வழக்கானது, ஜனவரி 11ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதால், அரியர் மாணவர்களுக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கு, அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக வருகின்ற டிசம்பர் 10ம் தேதி வரையிலும், தேர்வுக் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.