ரஜினியின் நம்பிக்கையினைக் காப்பாற்றுவாரா அண்ணாமலை!

05 August 2020 அரசியல்
annamalai.jpg

ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், நான் கட்சி ஆரம்பித்தால் முதல்வர் வேட்பாளர் நான் அல்ல எனவும், கட்சிக்கு ஒரு தலைவர் எனவும், ஆட்சிக்கு ஒரு தலைவர் எனவும் கூறினார். இதனால், பலரும் குழப்பம் அடைந்தனர். யார் அந்த முதல்வர் வேட்பாளர், யாராக இருக்கும் எனப் பலரும் குழம்பினர்.

இந்த சூழ்நிலையில், அண்ணாமலை என்ற இளம் காவல் அதிகாரியினைத் தான் ரஜினிகாந்த் குறிப்பிட்டு பேசியுள்ளார் என, பலரும் கூறி வருகின்றனர். இவரைப் பற்றி விசாரிக்கையில், தற்பொழுது பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூரில் பிறந்த இவர், விவசாயக் குடும்பத்தினைச் சேர்ந்தவர். கரூரிலும், பின்னர் நாமக்கல்லிலும் பள்ளிப் படிப்பினை முடித்தார்.

அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அதனைத் தொடர்ந்து, எம்பிஏ பட்டப்படிப்பினை ஐஐஎம் கல்லூரியில் படித்துப் பெற்றார். அவருக்கு காவல்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால், ஐபிஎஸ் தேர்விற்குப் படித்து தேர்ச்சிப் பெற்றபின், 2011ம் ஆண்டு அசிஸ்டெண்ட் சூப்பிரண்டென்ட் ஆப் போலீசாக, உடுப்பி மாவட்டம் கர்நாடகாவில் பணியாற்றினார்.

பின்னர், அந்த மாவட்டத்திற்கே 2015ம் ஆண்டு சூப்பிரண்டென்ட் ஆப் போலீசாக பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, அங்கு கர்நாடாகாவின் சிங்கம் போலீசாக பொதுமக்களால் பார்க்கப்பட்டார். 2019ம் ஆண்டு தன்னுடைய ஐபிஎஸ் வேலையினை ராஜினாமா செய்த அவர், இயற்கை விவசாயத்தில் இறங்கி உள்ளார். தன்னுடைய பதவிக் காலத்தில், பிரதமர் மோடி மற்றும் பாஜக முக்கியத் தலைவர் அமித் ஷாவினைப் பார்த்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் அவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தினையும் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பினைத் துவங்கி, சேவை செய்து வருகின்றார். இளைஞர்கள் சமூகத்திற்கு உதவியாக முன்னிற்க வேண்டும், முன் வந்து செயல்பட வேண்டும் என்பது இவருடைய லட்சியம் என்றுக் கூடக் கூறலாம். அந்த அளவிற்கு மனிதர், இளைஞர்களை முன்னிலைப்படுத்துகின்றார்.

HOT NEWS