அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத்கீதை! துணைவேந்தர் சூரப்பா விளக்கம்!

26 September 2019 அரசியல்
annauniversity.jpg

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விகுழுமத்தின் அறிவுறுத்தலின் படி, நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து, தத்துவவியலையும் பாடமாக சேர்க்கப்பட உள்ளது. அதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம், பகவத் கீதை உட்பட பட பாடங்களை ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது. இதனைக் கற்பதன் மூலம், தன்னைப் பற்றிய புரிதலை மாணவர்கள் பெற முடியும், என்று நம்புகிறது.

இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் பல தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனிடையே, இது பற்றிப் பேசியுள்ளார் அண்ணாப் பல்கலைக் கழகத் தலைவர் சூரப்பா.

அவர் பேசுகையில், ஏஐசிடிஇ பரிந்துரைத்தப் பாடங்கள், மாணவர்களுக்கான விருப்பப் பாடங்களாக மாற்றப்படும். இதனைத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம், அல்லது மற்ற 12 படாங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

HOT NEWS