ANONYMOUS-எனப்படும் "உங்களில் ஒருவன்"

11 April 2020 கதைகள்
anonymous.jpg

உலகில் உள்ள அனைத்து இணையம் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களையும், ஐடிக் கம்பெனிகளையும் பயமுறுத்திக் கொண்டு இருப்பவர்கள் இவர்களே. அரசிற்கும் அமைச்சர்களுக்கும் பயப்படாத நிறுவனங்கள் அனைத்தும் இவர்களுக்குப் பயந்தாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

இவ்வளவு ஏன், பல நாட்டு அரசாங்கங்களே இவர்களுக்குப் பயந்துப் பல லட்சம் கோடிகளை, இரகசியமாகச் செலவு செய்து வருகின்றனர் என்றால், இவர்களின் பலத்தை நீங்களேப் பாருங்கள்.

உலகம் டிஜிட்டலாகி வரும் சூழலில், அனைத்து வகையான பரிமாற்றங்களும், இணைய வலை தளங்களிலேயே நடைபெறுகின்றன. எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும், எளிதாகப் பாதுகாப்புத் தடைகளைக் கடந்து "ANONYMOUS" அமைப்பைச் சேர்ந்தவர்கள் பரிமாற்றங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் கைப்பற்றி விடுகின்றனர்.

யார் இவர்கள்:-

"ANONYMOUS" என்பது பல நாடுகளைச் சேர்ந்த இவர்கள், தாங்கள் யார் என்பது காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு நிழல் உலகக் குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இணையக் குற்றங்களை சடட் விரோதமாக செய்து விட்டுத் தங்களைப் போராளிகளாகக் காட்டிக் கொள்கின்றனர்.

இந்த அமைப்பில் ஏறத்தாழ 5000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாக கருதப்படுகிறது. பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களைப் பொறுத்த வரை, இவர்கள் மக்களுக்காகத் போராடுவதாகத் தங்களை அடையளப்படுத்திக் கொள்கின்றனர். SONY, BBC போன்ற பெரிய நிறுவனங்களை இவர்கள் தாக்கியிருப்பது நாம் அறிந்த ஒன்றே.

இவர்கள் மற்ற நிறுவனங்கள் செய்த சட்ட விரோத செயல்களை அறிந்து அதன் மூலம் அந்நிறுவனத்தை பிளாக் மெயில் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். அதே சமயம், தங்களை யார் எனக் காட்ட உலகில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களையும் சர்வர்களையும் ஹேக் செய்து பயத்தை உருவாக்குகின்றனர். இணையித்தில் நடக்கும் பணப் பரிமாற்றங்களை அறிந்து அதன் மூலம் பணத்தைத் திருடுகின்றனர்.

அமெரிக்கா மட்டும் இவர்களுக்குப் பயந்து தன்னுடையத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக பல லட்சம் கோடிகளை வெளிப்படையாகவே, செலவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS