ஈக்குவேடார் நாட்டை கதற விட்ட, அனானிமஸ் ஹேக்கர்கள்!

17 April 2019 தொழில்நுட்பம்
anonymous.jpg

நேற்று ஈக்குவேடார் நாட்டில் கிட்டத்தட்ட 40 மில்லியனுக்கும் அதிகமான எலக்ட்ரானிக் பொருட்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் பல பகுதிகளில் உள்ள, இணைய போராளிகளும், ஹேக்கர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈக்குவேடார் நாட்டில் கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான, கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்கள், இணைய எந்திரங்கள், சர்வர்கள் அனானிமஸ் எனப்படும் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த விஷயத்தை அவர்ளே, ஒரு வீடியோவாக வெளியிட்டு அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர். தொடர்ந்து மேலும் பல நாடுகளையும், நாடுகளில் உள்ள இணைய சேவையையும் ஹேக் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS