2000 ரூபாய் நோட்டினைத் திரும்பப் பெறும் திட்டம் இல்லை!

11 December 2019 அரசியல்
anuragthakur.jpg

இரண்டாயிரம் ரூபாய் நோட்டினைத் திரும்பப் பெறும் திட்டம் தற்பொழுது இல்லை என, மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர் அனுராக் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியினர் கேள்விகளை எழுப்பினர். அப்பொழுது, மக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசுத் திரும்பப் பெற உள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து, விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அனுராக் தாகூர், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் குறித்த பயம், இன்னும் மக்கள் மத்தியில் உள்ளது. மக்கள் அதைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. நாங்கள் 2,000 ரூபாய் நோட்டினைத் திரும்பப் பெறப் போவதில்லை. அதே போல், 1000 ரூபாய் நோட்டுக்களை அனுமதிக்கப் போவதும் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும், தற்பொழுது கள்ள நோட்டுக்களின் அளவுப் பெருமளவு குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS