ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில், யாருக்கும் இடம் கொடுக்காமல், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, புதிய வசதிகளும், தரமும் தான். ஆனால், அதன் நிலை இப்பொழுது முற்றிலும் வேறு. தற்பொழுது அந்த நிறுவனம், தன்னுடைய ஆப்பிள் என்றப் பெயரை வைத்து கடையை ஓட்டி வருகிறது. அதற்கு உதாரணம் தான் இந்த புதிய போன்கள்.
உண்மையில், ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய இடத்தினைத் தக்கவைத்துக் கொள்ள, கடுமையாக முயற்சி செய்து வருகின்றது. ஒரு காலத்தில், ஆப்பிள்லா அல்லது சாம்சங்கா என்றப் போட்டியே நிலவியது. தற்பொழுதுள்ள நிலையில், யார் முதலிடம் என்பதனை யாராலும் குறிப்பிட முடியாது அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன் சந்தைப் பெருகிவிட்டது. நேற்று, ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய அறவிப்பினை வெளியிடும் நிகழ்ச்சியை நடத்தியது. அதில், ஆப்பிள் வாட்ச் 5 சீரிஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, மற்றும் ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட பொருட்களை அறிமுகம் செய்தது. அவைகளைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த ஸ்மார்ட் போன், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சந்தைக்கு வரும் என்று, எதிர்ப்பார்க்கப்படுகிறது. 194 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட் போன், 5.94” உயரம் கொண்டது. ஐபிஎஸ் டிஸ்பிளேயுடன், ஒற்றை மற்றும் இரட்டை நானா சிம் பயன்படுத்தும் வசதியினைக் கொண்டுள்ளது.
6.1 இன்ச் டிஸ்ப்ளேயுடன், முற்றிலும் பாதுகாகப்பட்ட கண்ணாடியுடன், ஓலியோ போபிக் கோட்டிங் முறையினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐஓஎஸ் 13 என்ற இயங்கு தளத்துடன் வெளிவர உள்ளது. இதிலும், மெமரி கார்ட் பயன்படுத்த இயலாது. மாறாக, 4 ஜிபி ராம் 64 ஜிபி ரோம், 4 ஜிபி ராம்- 128 ஜிபி ரோம், 4ஜிபி ராம் 256 ஜிபி ரோம்முடன் உருவாக்கப்பட்டுள்ளது.
12 மெகா பிக்சல் கொண்ட, தலா இரண்டு கேமிராக்கள் பின் பக்கத்திலும், 12 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமிராவும் இதில் உள்ளன. 3110 எம்ஏஹெச் பேட்டரியுடன் இந்த ஸ்மார்ட் போன் தயாராகி உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 63,000 ரூபாய் இருக்க வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த ஸ்மார்ட் போனும், நேற்று ஆப்பிள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட் போனுக்கும், ஐபோன் 11 மாடலுக்கும் ஒரு சில வித்தியாசங்களே உள்ளன. மற்றபடி, அனைத்தும் அப்படியே உள்ளது தான், இந்த போனின் சிறப்பம்சமே. ஹாஹாஹா!
5.8 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வெளிவர உள்ள இந்த ஸ்மார்ட் போன், நேனோ சிம், எலக்ட்ரானிக் சிம் கார்டு பயன்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓஎல்ஈடி டிஸ்பிளேயுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 1125x2436 ரெசல்யூசனுடன், ஹெச்டிஆர்10 அமைப்புடன் கூடியது. இந்த ஸ்மார்ட் போனிலும் ஐஓஎஸ் 13 பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதிலும், எக்ஸ்டெர்னல் மெம்மரி கார்ட் பயன்படுத்த இயலாது. 6 ஜிபி ரேம்-64 ஜிபி ரோம், 6 ஜிபி ரேம்-256 ஜிபி ரோம், 6 ஜிபி ரேம்-512 ஜிபி ரோமுடன், அசத்தும் விதத்தில் மெம்மரி வசதியைக் கொண்டுள்ளது.
கேமிராவிற்கு வருவோம். என்னமொ தெரியல, என்ன மாயமோ தெரியல, ஆப்பிள் மொபைல்களும், தற்பொழுது மூன்று கேமிராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூன்று மெயின் கேமிராக்களைக் கொண்டுள்ள இந்த போனில், ஒவ்வொரு கேமிராவும் தலா 12 மெகா பிக்சல் திறன் கொண்டவை. ஒவ்வொன்றும் தனித்தனி வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவை இணைந்து புகைப்படம் எடுக்கும் பொழுது, சிறப்பான புகைப்படத்தை தரும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
அதே சமயம் 12 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமிராவும் இந்த போனில் உள்ளது. இதிலும் ஹெட்போன் மாட்ட முடியாது. 3190எம்ஏஹெச் அளவுள்ள, இன்பில்ட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போனிற்கும், ஐபோன் 11க்கும் ஒரு சில வித்தியாசங்கள் தான். அது அளவு மட்டும் தான். ஐபோன் 11 ப்ரோ 5.8 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வெளி வந்துள்ளது என்றால், இந்த மேக்ஸ் 6.5 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வெளிவந்துள்ளது. அதே போல் பேட்டரியும் இதில் 3500 எம்ஏஹெச் திறனுள்ள பேட்டரிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றப்படி, இதற்கும், ஐபோன் 11ப்ரோவுக்கும் ஒரே விதமான விஷேச வசதிகளே வழங்கப்பட்டுள்ளன. விலையிலும் சற்று மாற்றும் உள்ளது. இந்த போன் 98,800 ரூபாய்க்கு, விற்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.