அட்டகாசமான ஆப்பிள் வாட்ச், டேப், ஐபேட்! பட்டைய கிளப்பும் ஆப்பிள் நிறுவனம்!

16 September 2020 அரசியல்
applewatchse.jpg

ஒவ்வொரு ஆண்டும், ஆப்பிள் நிறுவனம், தன்னுடையப் பொருட்களை அறிமுகம் செய்து கொண்டே உள்ளது. ஸ்மார்ட்போன் உலகின் ராஜாவாக இருக்கும் இந்நிறுவனம், இந்த ஆண்டும் புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் கூட்டமானது, முதன் முறையாக இணைய வழியில் நடைபெற்றது. இதற்கு ஆப்பிள் பிளைஸ் என்றுப் பெயர் வைத்தது. மிகக் குறுகிய நேரமே நடைபெற்ற இந்த கூட்டத்தில், அந்நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, வாட்ச் எஸ்இ, ஐபேட் 8வது ஜென், மேம்பட்ட ஐபேட் ஏர், ஆப்பிள் ஒன் மற்றும் பிட்னஸ் பிளஸ் எனப் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆப்பிள் வாட்ச் 6

இந்த வாட்ச்சானது, எஸ் 6 பிராசஸர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பிளட் பிரசர், ஹார்ட் பீட் உள்ளிட்ட பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் பழைய மாடலை விட, இரு மடங்கு வேகத்துடன் செயல்படக் கூடியதாக உருவாக்கப்பட்டு உள்ளது. பலவித அம்சங்களுடன் வெளி வந்துள்ள இந்த வாட்சானது 40,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ

இந்த வாட்சானது 29,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது. இந்த வாட்ச்சில், எஸ் 5 பிராஸசர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இரு மடங்கு வேகத்துடன் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வாட்சானது, மேம்படுத்தப்பட்ட பல வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஐபேட் 8வது ஜென்

ஐபேட் வரிசையில் 8வது தலைமுறை ஐபேட்டானது அறிமுகம் செய்யப்பட்டது. இது 10.2 இன்ச் டிஸ்ப்ளேயுடன், ஏ12 பயோனிக் பிராஸசர், ஐஓஎஸ் 14 உள்ளிட்ட சக்தி வாய்ந்த அமைப்புடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 மடங்கு அதிவேகமாக செயல்படும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு உள்ளது. இது 29,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது.

ஐபேட் ஏர்

இந்த ஐபேட்டின் விலையானது 54,990 ரூபாயாகும். இதில், 10.9 இன்ச் டிஸ்ப்ளே, ஏ14 பிராஸசர், 40 சதவிகிதம் வேகமாக சிபியூ, இரண்டு கேமிராக்கள், வேகமான கிராபிக்ஸ் என பல வசதிகளுடன் இந்த ஐபேட் விற்பனைக்கு வர உள்ளது.

HOT NEWS