இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், குஷ்புவின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில், தயாராகி வரும் திரைப்படம் அரண்மனை-3.
அரண்மனை, அரண்மனை-2 படங்களின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து, இயக்குநர் சுந்தர் சி தற்பொழுது அரண்மனை படங்களின் மூன்றாம் பாகத்தினை உருவாக்கி வருகின்றார். இந்தப் படத்தின் சூட்டிங்கானது, கடந்த மார்ச் 4ம் தேதி அன்று தொடங்கியது.
இந்தப் படத்தில், நடிகர் ஆர்யா நடிக்கின்றார். முதல் பாகத்தில் வினய் நடித்திருந்தார். பின்னர் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். தற்பொழுது உருவாக்கப்படும் மூன்றாவது பாகத்திற்கு ஆர்யா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்தப் படத்தில், நடிகர் விவேக், யோகி பாபு, மனோ பாலா, சம்பத் குமார், ராக்சி கண்ணா, சாக்சி அகர்வால், ஆண்ட்ரியா, விச்சு மற்றும் நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.
குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் உள்ள வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரம்மாண்டமான அரண்மனையில், இந்த சூட்டிங்கானது நடைபெற்று வருகின்றது.