நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என தொடங்கும், தலைவி படத்தின் டீசர் இன்று வெளியானது. இதில், அரவிந்த் சாமி புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏஎல்விஜய் நடிப்பில், நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் தலைவி படமானது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது. இந்தப் படத்தில், எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில், நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளார் என்றத் தகவல், ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இன்று எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளானது, வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அவருடையப் பிறந்தநாள் அன்று, அவரைக் கௌரவிக்கும் பொருட்டு, தன்னுடைய பர்ஸ்ட் லுக்கினை அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார்.
பார்ப்பதற்கு அச்சு அசலாக, உண்மையான எம்ஜிஆரைப் போலவே அவர் இருக்கின்றார் என, பலரும் தங்களுடையக் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக, பல படங்களை அவர் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.