களரி, ஜூலை காற்றில் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் சம்யுக்தா மேனன். தற்பொழுது தமிழில் படங்கள் இல்லாத காரணத்தால், மலையாளப் படங்களில் நடித்து வருகின்றார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் உள்ள அவர், ரசிகர்களின் கேள்விகளுக்கு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பதில் சொல்லி வருகின்றார்.
அதில், ஒரு ரசிகர் நீங்கள் விர்ஜினா என்றுக் கேள்வி எழுப்பினார். அதற்கு டென்ஷனான சம்யுக்தா, பெண்களிடம் விர்ஜினா, ஆல்கஹால் குடிப்பியா, செக்ஸ் பற்றியக் கேள்விகளைக் கேட்டால் பயந்து கொண்டு ஓடி விடுவார்கள் என நினைத்தீர்களா? நான் உங்களுக்குப் பயப்பட மாட்டேன் என்றுக் கூறியுள்ளார்.
வேறு யாரிடமாவது பேசி, செமையாக அடிவாங்கப் போகின்றீர்கள், ஜாக்கிரதையாக இருங்கள் என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். இதை அவருடைய ரசிகர்கள், வரவேற்று உள்ளனர்.