தன்னுடைய செய்தி சேனலில் தகாத விதத்தில் செய்தி ஒளிபரப்பியதற்காக, பிரிட்ஷ் ஒளிபரப்புத்துறையானது 20 லட்ச ரூபாயினை ரிபப்ளிக் டிவி சேனலுக்கு அபராதமாக விதித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற செய்தி வாசிக்கும் நிகழ்ச்சியில், தினசரி நிகழ்வுகள் அனைத்தையும் Poochta Hai Bharat, என்ற பெயரில் அர்னாப் தொகுத்து வழங்கி வந்தார். அதில் இந்தியாவானது 2019ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி அன்று சந்திராயன் 2 விண்கலத்தினை அனுப்பியுள்ளது. ஆனால், பாகிஸ்தானோ தொடர்ந்து தீவிரவாதிகளை தயாரித்து வருகின்றது எனக் கூறினார். இது தற்பொழுது பெரிய அளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.
இந்த டிவியின் நிகழ்ச்சிகளை Worldview Media Network Limited என்ற நிறுவனமானது, ரிபப்ளிக் பாரத் என்ற பெயரில் அங்கு அந்த டிவியினை ஒளிபரப்பி வருகின்றது. இதனை அந்நாட்டு Ofcom எனப்படும் Office of Communications என்ற அமைப்பானது, தற்பொழுது கண்டித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தானில் வாழ்கின்ற குழந்தைகள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்காக, ரிபப்ளிக் டிவியானது தன்னுடைய சேனலில், மன்னிப்பு கேட்கின்றோம் என ஒளிபரப்ப வேண்டும் எனவும், 20,000 இங்கிலாந்து பவுண்ட்கள் அதாவது 19,50,000 ரூபாயினை அபராதமாக கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 26 மற்றும் ஏப்ரல் 9ம் தேதி என, இரண்டு தினங்களிலும் ரிபப்ளிக் டிவியானது மொத்தம் 280 தடவைக்கும் மேல், மன்னிப்புக் கேட்டுள்ளதாகவும், அதனை டிவியில் ஒளிபரப்பியதாகவும் தெரிவித்து உள்ளது. இது இந்துத்துவா தலைவாரக இருந்து வந்த சாவர்க்கர் கேட்ட மன்னிப்பினைக் காட்டிலும் அதிகம் என, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
It’s amusing that even as #ArnabGoswami quietly apologised 280 times, at all hrs of the day and night, for spreading his vile bile, as instructed by the UK regulator, propagandists & trolls are spinning his surrender as a great act of patriotism & defiance by their hero! pic.twitter.com/spcjTtoiXv
— Nikhil J Alva (@njalva) December 23, 2020