REPUBLIC TV அர்னாப் கோஸ்வாமி கைது! பாஜக தலைவர்கள் கண்டனம்!

04 November 2020 அரசியல்
arnabgoswamiarrest.jpg

REPUBLIC TV உரிமையாளரும், மீடியா சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் அர்னாப் கோஸ்வாமி இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து REPUBLIC TV மீதும், அதன் உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி மீதும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. டிஆர்பி முறைகேடு, தற்கொலைக்கு காரணமாக அமைந்தது உள்ளிட்டப் பல விஷயங்களில் அவருடைய பெயரானது தாறுமாறாக அடிபட்டது. இந்த சூழலில், கடந்த 2018ம் ஆண்டு மும்பையினைச் சேர்ந்த 53 வயதுடைய இன்டீரியர் டிசைனரான அன்வாய் மாலிக் மற்றும் அவருடைய தாய் குமுத் நாயக் ஆகியோர், தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்கள் தங்களுடைய மரண வாக்குமூலமாக, ஒரு கடிதத்தினை எழுதியிருந்தனர். அதில், அர்னாப் கோஸ்வாமி, பெர்ரோஸ் சேக் மற்றும் நிதிஷ் சார்தா உள்ளிட்டோர் தான், என்னுடைய தற்கொலைக்குக் காரணம் எனவும், அவர்கள் வழங்க வேண்டிய பாக்கி பணத்தினை வழங்காததால் தான், வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றோம் என எழுதி வைத்துள்ளார்.

இந்த மரண வாக்கு மூலத்தினைக் கைப்பற்றிய போலீசார், 2018ம் ஆண்டு முதல் விசாரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இன்று அலிபாக் நகர போலீசார் காலையில் அர்னாபின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு அவரை அடித்து, தலை முடியினைப் பிடித்து தரத்தரவென இழுத்துச் சென்றனர். அத்துடன் அவருடைய மனைவியும் தாக்கப்பட்டார் என, அர்னாப் கோஸ்வாமி கூறினார். இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் தங்களுடையக் கண்டனத்தினைத் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS