அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்! காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு!

23 April 2020 அரசியல்
arnab.jpg

ரிபப்பளிக் டிவி உரிமையாளரும், பிரபல செய்தி தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல் நடதப்பட்டதாக, அவர் வீடியோ மூலம் கூறியுள்ளார்.

தான் ஸ்டுடியோவில் இருந்து வீட்டிற்குத் திரும்பி வரும் பொழுது, இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வந்ததாகவும், அவர்கள் என்னைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை அன்று, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அர்னாப், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக, கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு 12.15 மணியளவில், தன்னுடைய டிவியின் ஸ்டுடியோவில் இருந்து வீட்டிற்குத் திரும்பும் பொழுது, பைக்கில் வந்த இருவர் அவர் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கார்களில், கருப்பு சாயத்தினையும் வீசியுள்ளனர். கார் ஓட்டுநரின் ஜன்னல் கண்ணாடியினை உடைக்கவும் அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அதனை உடைக்கவில்லை.

இதனால், கையில் இருந்த பாட்டிலில் உள்ள மையினை என் கார் மீது ஊற்றிவிட்டு சென்று விட்டனர். என தன்னுடைய வீடியோ பதிவில் கூறியுள்ளார். இதுகுறித்து, மும்பை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். மேலும், இதற்கு காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியுமே காரணம் எனக் கூறியுள்ளார்.

இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், இது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு எதிரானது எனவும், உண்மையாக இருப்பவர்களுக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார். அவருடைய(அர்னாப்) புகார் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS