மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் வசித்து வந்த அன்வாய் நாயக் மற்றும் அவருடையத் தாய் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். அப்பொழுது அவர்கள் தன்னுடையக் கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளனர். அதில், கட்டிட வடிவமைப்பாளரான நான், அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேருக்கு வேலை செய்து தந்தேன். ஆனால், அவர்கள் எனப் பல கோடி ரூபாயினை வழங்காமல் மறுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக, நானும் என் தாயும் தற்கொலை செய்து கொள்கின்றோம் என்று எழுதி வைத்துவிட்டு, 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கினை, தற்பொழுது அந்நகரப் போலீசார் எடுத்து விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள அர்னாப் மற்றும் 2 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவருடைய ஜாமீன் மனுவினை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவினை நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், இந்திரா பானர்ஜி உள்ளிட்டோர் விசாரித்தனர். அப்பொழுது பேசிய நீதிபதிகள், நானே அவர் சேனலைப் பார்க்க மாட்டேன். அவருக்கென்று தனி சித்தாந்தம் இருக்கலாம்.
ஆனால், தற்பொழுது நிலவுகின்ற சூழ்நிலையினை கவனிக்காவிட்டால், நாம் அழிவின் பாதையில் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளார். அர்னாபின் அடிப்படைக் கருத்து சுதந்திரைத்தினை தடுக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அர்னாப், தன்னுடைய காரில் ஏறி வெற்றி வெற்றி எனக் கத்திக் கொண்டே வீட்டிற்கு சென்றார்.