அரியர் தேர்வு ரத்து செய்ய முடியாது! யூஜிசி பிடிவாதம்! என்ன ஆகும் மாணவர்கள் எதிர்காலம்?

18 November 2020 அரசியல்
highcourt.jpg

அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது எனவும், விரைவில் அரியர் தேர்வினை நடத்த வேண்டும் எனவும் யூஜிசி திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், அண்ணா பல்கலைக் கழகம் உட்பட, தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும், தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா எதிர்த்தார். அத்துடன், யூஜிசி மற்றும் ஏஐசிடிஇ உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த சூழலில், பலரும் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கானது, நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா உள்ளிட்டோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் தமிழக அரசினை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து, பதில் மனுவினை யூஜிசி தாக்கல் செய்தது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்துள்ளதை ஏற்க முடியாது எனவும், தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்த வழக்கானது வருகின்ற 20ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், யூஜிசியின் இந்தப் பதிலால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

HOT NEWS