370 மற்றும் 35-ஏ பிரிவுகள் ரத்து! பாஜக அதிரடி! அமித் ஷா மனுவினை தாக்கல் செய்தார்!

05 August 2019 அரசியல்
amithshah1.jpg

இன்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஜம்மூ-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தினை, ரத்து செய்யும் மசோதாவினை கொண்டு வந்தார்.

இதற்குப் பல எதிர்க்கட்சியினர் தங்களுடைய எதிர்ப்பினை கொண்டு தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக, இந்திய இராணுவத்தினர் பல ஆயிரம் பேர், காஷ்மீர் பகுதியில் குவிக்கபட்ட வண்ணம் இருந்தனர். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், இன்று அதற்கான விடையும் கிடைத்துள்ளது.

இன்று காலையில், திரு. அமித்ஷா அவர்கள், நான்கு மசோதாக்களை அறிவித்தார். அதன்படி, இதுவரை காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மூ மற்றும் காஷ்மீரில் இருந்து லடாக் பகுதியினை, தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிப்பதாக கூறினார்.

இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவருடைய ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கான நகலும், இன்று பத்திரிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டது.

HOT NEWS