தமிழ் சினிமாவில் தற்பொழுது, முன்னேறி வருகின்ற நடிகராக அருண் விஜய் இருக்கின்றார். மாஃபியா, பாக்ஸர் என அடுத்தடுத்துப் படங்கள வரும் 2020ம் ஆண்டு வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், அவர் நடிக்க உள்ள #ஏவி31 என்றப் புதியப் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில், அருண் விஜய் நாயகனாக நடக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் அறிவழகன் இயக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே, குற்றம் 23 என்ற வெற்றிப் படத்தில் இணைந்திருந்தனர். தற்பொழுது, இருவரும் இரண்டாவது முறையாக #ஏவி31 என்ற படத்தில் இணைகின்றனர்.
இந்தப் படத்தினை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. படத்தின் மற்றக் கலைஞர்களைப் பற்றியத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இயக்குநர் அறிவழகன் இதற்கு முன், ஈரம், வல்லினம், ஆராது சினம் மற்றும் குற்றம்23 என்ற வெற்றிப் படங்களைத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.