வீட்டுச் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்! ஆம் ஆத்மி அதிர்ச்சி தகவல்!

08 December 2020 அரசியல்
arvindkejriwalcm.jpg

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்பொழுது வீட்டுச் சிறையில் உள்ளார்.

டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் ஒன்றாக கூடி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நவம்பர் 7ம் தேதி அன்று சந்தித்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவர்களுக்கு போராட்டத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் எட்டாம் தேதி அன்று, இந்தியா முழுவதும் இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல அமைப்புகளும், எதிர்கட்சிகளும் முழு அடைப்பில் ஈடுபட்டு உள்ளன. இந்த சூழலில், தற்பொழுது டெல்லியினை ஆளுகின்ற ஆம் ஆத்மி கட்சியானது பரபரப்புத் தகவலை வெளியிட்டு உள்ளது.

அதில், டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், தற்பொழுது டெல்லி போலீசாரால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். நேற்று அவர், விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வாறு அவர் அடைக்கப்பட்டு உள்ளார் என அக்கட்சியானது குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அதற்கு டெல்லி போலீசானது மறுப்பு தெரிவித்து உள்ளது. அவ்வாறு அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

HOT NEWS