இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில், மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் கேரளாவின் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன்.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சியானது 51 இடங்களில் வெற்றி பெற்றது. 100 வார்டுகளில் நடைபெற்றத் தேர்தலில் பாஜக 35 இடங்களில் வென்று, எதிர்கட்சியாக உருவாகி உள்ளது. அதே போல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஐனநாயக கூட்டணியானது 10 இடங்களில் வெற்றி பெற்றது. 4 சுயேட்சைகளும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளனர்.
இந்தத் தேர்தலில் முடவன்காடு பகுதியில், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். அவர் தற்பொழுது அக்கட்சியின் பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார். அவருக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு செல்வாக்கு உள்ளது. அவர் வெற்றி பெற்றக் காரணத்தால், அவரை தற்பொழுது திருவணந்தபுரம் மாவட்டத்தின் மேயராக, அக்கட்சியானது நியமித்து உள்ளது. அவருடையத் தந்தை ஒரு எலக்ட்ரீசியன் மற்றும் அவருடையத் தாய் ஒரு எல்ஐசி ஏஜெண்ட் ஆவார்கள்.