சார்மினாரில் கொடியேற்றம்! லட்சக்கணக்கான மக்களுடன் பேரணி! ஓவைசி அதிரடி!

06 January 2020 அரசியல்
asaduddinowaisi.jpg

ஜனவரி பத்தாம் தேதி, லட்சக்கணக்கான மக்களுடன் பேரணி நடத்த உள்ளதாக, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாடுதீன் ஓவைசி கூறியுள்ளார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க சார்மினாரில் வருகின்ற ஜனவரி 25ம் தேதி அன்று, தேசியக் கொடியினை ஏற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், தெலுங்கானாவில், பேரணி நடத்த அம்மாநில அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், ஹைதராபாத்தில் உள்ள மிர் ஆலம் எட்காவில் இருந்து தொடங்க உள்ளது. ஜனவரி மாதம் 10ம் தேதி அன்று, இந்தப் பேரணியானது நடக்க உள்ளது. இதற்கு மில்லியன் மார்ச் எனப் பெயரும் வைத்துள்ளார் ஓவைசி. இதற்காக 40 குழுக்கை ஒருங்கிணைத்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பேரணியானது, சாஸ்திரிபுரம் மைதானத்தில் முடிவடைய உள்ளது. சுமார் பல லட்சம் பேர், இந்தப் பேரணியில் பங்குபெற உள்ளனர். இந்தியாவினையே திரும்பிப் பார்க்கும் விதமாக, இந்தப் பேரணி நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து, ஜனவரி 25ம் தேதி அன்று நள்ளிரவு, பிரசித்திப்பெற்ற சார்மினார் கோட்டையில், நம் நாட்டின் தேசியக் கொடியினை நான் ஏற்ற உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் தலைமையில், உத்திரப்பிரதேசம் தற்பொழுது மோசமாக நடந்து கொண்டு இருக்கின்றது. அங்குள்ள மக்களிடம், 14 ரூபாயினை வசூலித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதால், அனைவரும் 14 ரூபாயினை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பொதுமக்கள் இந்த சிஏஏ சட்டம் குறித்து, செல்ஃபி வீடியோக்களை, பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார். அவர்கள், போராட்டத்திற்கு புதிய புத்துணர்ச்சியினை அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS