பற்றி எரியும் அசாம்! காஷ்மீர் போல மாறிய அவலம்! இராணுவம் குவிப்பு!

12 December 2019 அரசியல்
assamprotest.jpg

pic credit:twitter.com/@mariumbegum771

இந்திய அரசாங்கம், தற்பொழுது வெற்றிகரமாக இந்திய தேசிய குடியுரிமை சட்டத்தினை அமலுக்கு கொண்டு வர உள்ளது. இன்னும், குடியரசுத் தலைவரின் கையொப்பம் மட்டுமே வாங்க வேண்டி உள்ளது.

இதனையடுத்து, தற்பொழுது இந்தியா முழுவதுமே இதற்கு எதிர்ப்பலைகள் கிளம்பி உள்ளன. குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்களான அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சாலையில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர்.

நேற்று முதல் கடுமையானப் போராட்டத்தில் பொது மக்களும், கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கவுகாத்தி நகரில் மோடிக்கு எதிராகவும், அமித் ஷாவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களைக் கலைக்க, போலீசார் முதலில் வஜ்ரா வாகனத்தின் மூலம் தண்ணீரினைப் பீய்ச்சி அடித்தனர். பின்னர், தடியடி நடத்தி கலைக்க முயற்சித்தனர். இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசமாகப் போராட ஆரம்பித்து விட்டனர். இதனால், நிலைமை மோசமாவதை அறிந்த மத்திய அரசு தற்பொழுது இராணுவத்தினை அங்கு களமிறக்கி உள்ளது. அங்கு இன்று காலையில், அணிவகுப்பு நடத்திய இராணுவத்தினர் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து உள்ளனர்.

பலப் பகுதிகளில், இணைய சேவைத் துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் விமானங்கள் என அனைத்தும் அசாமில் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தற்பொழுது, காஷ்மீரில் நிலவி வந்த நிலமையானது, அசாமில் நிலவி வருவதாக, அசாம் மாநில மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS