ஆஸ்திரேலியாவை காலி செய்த ஆர்ச்சர்! இங்கிலாந்து முன்னிலை!

14 September 2019 விளையாட்டு
jofraarcher.jpg

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 87.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும், இழந்து 294 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் மிச்சல் மார்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், பேட் கும்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஹாசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 68.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 80 ரன்களும், மார்னஸ் 48 ரன்களும் சேர்த்தனர். லயன் 25, சிடில் 18, மார்ஸ் 17 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் அசத்தலாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார். சாம் குர்ரான் 3 விக்கெட்டுகளையும், கிரிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி தற்பொழுது 78 ரன்கள் முன்னிலையில், உள்ளது.

HOT NEWS