கடந்த ஆகஸ்ட் மாதத்தை தொட்டு, மொத்தம் 70% உற்பத்தியும், விற்பனையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அசோக் லேலேண்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும், வாகன உற்பத்தி நிறுவனம் அசோக் லேலேண்ட். இந்நிறுவனம், கனரக, அதிகனரக வாகனங்களை உற்பத்தி செய்து, இந்தியா முழுவதும் விற்று வருகிறது. இந்நிலையில், இந்திய நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக் காரணமாக, 70% உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தற்பொழுது ஒரு விபரீத முடிவினையும் எடுத்துள்ளது. அதன்படி, இன்று (06-09-2019) முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு (ஞாயிறுக் கிழமையை தவிர்த்து) விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறையை சென்னையில் உள்ள, என்னூர் தொழிற்சாலையில் அறிவித்துள்ளது அசோக் லேலேண்ட்.
இதனால், சம்பளம் சரியாக இந்த மாதம் வராது என, அந்நிறுவன ஊழியர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 68% உற்பத்தி மற்றும் முழுமையாக இல்லை எனவும் தெரிகின்றது.
இதன் காரணமாக, செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால், மொத்தமாக பத்து நாட்கள் மட்டுமே, இந்த மாதம் வேலை இருக்கும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், விடுமுறை நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, சுமார் 9000 ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, மாருதி சுசூகி, ஹூண்டாய், டாட்டா உட்பட பல நிறுவனங்கள், விடுமுறை அளித்துள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.