இரண்டு டிவி சேனல்களுக்கு தடை! பசிதம்பரம் கண்டனம்! மீண்டும் செயலுக்கு வந்தன!

07 March 2020 அரசியல்
asianetmediaoneban.jpg

கேரள மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டு செய்தி சேனல்களுக்கு, 48 மணி நேரத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் காரணமாக சுமார் 53 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனை பல செய்தி சேனல்களும், செய்திகளாகவும், தொகுப்புகளாகவும் காண்பித்து வந்தன. இந்நிலையில், வன்முறையினைத் தூண்டும் விதத்தில், செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என, மத்திய அரசு வலியுறுத்தியது.

இதனிடையே, கேரளாவினைச் சேர்ந்த, ஏசியாநெட் சேனலும், மீடியா ஒன் சேனலும், இந்த வன்முறைக் குறித்த செய்திகளை காண்பித்து வந்தன. அதில், ஏசியாநெட் சேனலானது, மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து காட்டியது. அதே போல், மீடியா ஒன் சேனலானது, சிஏஏ ஆதரவாளர்களின் போராட்டம் குறித்துக் காட்டியது. இதனால், இந்த இரண்டு சேனல்களுக்கும் தற்பொழுது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தடையானது, நேற்று (06-03-2020) முதல் நாளை (08-03-2020) வரை நீட்டிக்க்கப்பட்டு உள்ளது. மொத்தம் இரண்டு நாட்களுக்கு, இந்த தடையானது விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து, தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், மனீஷ் திவாரி, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இந்த செயலானது, ஊடகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ப சிதம்பரமோ, ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது எனவும், ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் கூறியுள்ளார். கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த இரண்டு சேனல்கள் மீதானத் தடை உத்தரவினைத் தற்பொழுது, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை வாபஸ் பெற்றது.

HOT NEWS