ஊரடங்கு உத்தரவானது சட்டத்திற்கு புரம்பானது! அசாடுதின் ஓவைசி!

14 May 2020 அரசியல்
asaduddinowaisi11.jpg

ஊரடங்கு உத்தரவானது இந்திய அரசியல் சாசனத்திற்குப் புரம்பானது என, அசாடுதின் ஓவைசித் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், தற்பொழுது மத்திய அரசானது ஊரடங்கு உத்தரவினை தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில், அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது முற்றிலும் புரம்பானது. மாநில அரசுகள் இது குறித்து மவுனமாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை. இந்த செயலுக்கு எதிராக, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும்.

மஹாராஷ்டிராவில் ரயிலின் காரணமாக 16 பேர் மரணமடைந்தது, மிகுந்த வேதனை அளிக்கின்றது. இது குறித்து, மஹாராஷ்டிரா அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முற்றிலும் திட்டமிடப்படாத இந்த ஊரடங்கால், புலம்பெயரும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து, தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இந்தி என்டிஏ அரசாங்கம், அவர்களுக்காக என்ன செய்துள்ளது. இந்த கோவிட்-19 பாதிப்பிலால் அனுமதிக்கப்படும் நோயாளிகள் அனைவரும், எவ்விதப் பாரபட்சமுமின்றி நடத்தப்பட வேண்டும். டெல்லியில் ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால், சிறையில் உள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS