அசாம் எண்ணெய் வயலில் தீ விபத்து!

10 June 2020 அரசியல்
assamoilfire.jpg

அசாம் மாநிலத்தில் உள்ள டின்சுகியா என்ற மாவட்டத்தில், ஆயில் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான, எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பல அடி உயரத்திற்கு கரும் புகைகள் பரவ ஆரம்பித்துள்ளது.

கடந்த மே 27ம் தேதி முதல், சுமார் இரண்டு வாரங்களாக, இங்கு உள்ள எண்ணெய் கிணற்றில் இருந்து, எரிவாயுக் கசிவு ஏற்பட்டு வந்தது. இதனால், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநில போலீசார் உட்படப் பலரும் இப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றினர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆறாயிரம் பேர் தற்பொழுது வரை வெளியேற்றப்பட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சிங்கப்பூரில் உள்ள பல வல்லுநர்களும், இந்த எண்ணெய் வயலுக்கு வந்துள்ளனர். அவர்கள் எரிவாயுக் கசிவினை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்நிலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை அணைக்கும் முயற்சியில், தற்பொழுது பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS