வட சென்னை 2 படம் சந்தேகமே இல்லாம பண்றோம் என, நடிகர் தனுஷ் பேசினார். அசுரன் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், கலைப்புலி தாணு, படம் ஒப்பந்தமான உடனேயே தன்னுடைய சம்பளத்தைத் தந்துவிட்டார் எனக் கூறினார்.
வடசென்னைப் படத்திற்கு விருது கிடைக்கும் என, பிறர் பேசிய நிலையிலும், நாங்கள் அதனை எதிர்ப்பார்க்கவில்லை. நாங்கள் அதனை ஆடுகளம் படத்திலேயே வாங்கிவிட்டோம். அதனால், விருதுகள் மீது ஆசைகள் இல்லை. இருப்பினும், பரியேறும் பெருமாள், ராட்ச்சன் உள்ளிட்ட படங்களுக்கு விருது கிடைக்காதது, வருத்தம் அளிக்கிறது என கூறினார்.
படத்தில் 50 வயது தந்தையாகவும், 20 வயது மகனாகவும் நடிகர் தனுஷ் நடித்துள்ளதாகவும் கூறினார். அப்பொழுது, வடசென்னை ஒன்று மற்றும் வட சென்னை இரண்டாம் பாகம் முடித்த பின், அசுரன் படம் போகலாம் எனச் சொன்னேன். ஆனால், அசுரன் திரைப்படத்தினை முடித்துவிட்டு, வடசென்னை 2 படத்திற்குச் செல்வோம் என வெற்றிமாறன் கூறினார். அதனால், அசுரன் படத்தினை முன்னதாகவே எடுக்க ஆரம்பித்துவிட்டோம். கண்டிப்பாக வடசென்னை 2 திரைப்படம் வரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், அவர் பேசுகையில், என்னுடைய திரை அனுபவத்தில், அசுரன் திரைப்படம் வேற லெவல் திரைப்படம் எனக் கூறினார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது, தன்னுடைய பாக்கியம் எனவும் கூறினார்.