வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதற்கு, பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அசுரன் திரைப்படம் கடந்த நான்காம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் காட்சியில் இருந்து, தற்பொழுது வரை ரசிகர்கள் வரிந்து கட்டிக் கொண்டு படத்திற்குச் செல்கின்றனர். இந்நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக, தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதத்தில், படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு, படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நூறு கோடி என பதிவிட்டுள்ளார். இதனை தற்பொழுது, தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா வரிசையில், நடிகர் தனுஷும் தற்பொழுது, 100 கோடி பட்டியலில் இணைந்துள்ளார்.
சாதனை படைத்தவர்கள் வரிசையில்! #AsuranEnters100CroreClub pic.twitter.com/hRfsZoXKwK
— Kalaippuli S Thanu (@theVcreations) October 15, 2019