தனுஷ் படத்திற்கு கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்க வேண்டாம் என, தனுஷ் தலைமை நற்பணி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து, அவர்கள் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றன.
இந்நிலையில், வரும் வாரம் படம் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் பிளக்ஸ் வைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது தனுஷ் தலைமை நற்பணி மன்றம். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் சார் அவர்களின் நடிப்பில், அக்டோபர் 4ம் தேதி வெளியாக இருக்கும், அசுரன் திரைப்படத்திற்கு கட் அவுட்கள் மற்றும் பேனர் ஆகியவற்றை வைப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக, உங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு, அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில், அன்புடன் கேட்டுக் கொள்கிறோம், என்று அந்த அறிக்கையில் உள்ளது.