உலகின் நீளமான சுரங்க பாதை! மோடி திறந்து வைத்தார்!

03 October 2020 அரசியல்
atultunnel.jpg

உலகிலேயே மிகவும் நீளமான அடல் சுரங்கத்தினை, பாரதப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இமாச்சலப் பிரதேசம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி முதல் ரோதாங் பகுதி வரை சுரங்கப் பாதை அமைக்க, வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அந்த சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கப் பாதை எனப் பெயர் சூட்டப்பட்டது. சுமார் 9.02 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாதையை தற்பொழுது மோடியின் அரசு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, சமூக இடைவெளியினைப் பின்பற்றி இன்று இந்த சுரங்கப் பாதையினை திறந்து வைத்தார். இந்த சுரங்கப் பாதையின் காரணமாக, பயண நேரமானது 5 மணி நேரம் குறையும். இதன் வழியாக, ஒவ்வொரு நாளும் 3,000 கார்களும், 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும் பாதையில் இந்த சுரங்கப் பாதைக் கட்டப்பட்டு உள்ளது.

HOT NEWS