கொரோனா அச்சம் எதிரொலி! உலக சுகாதார மையத்தின் தலைவர் தனிமைப்படுத்தி கொண்டார்!

03 November 2020 அரசியல்
whochief.jpg

கொரோனா பரவல் அச்சம் காரணமாக, உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் தற்பொழுது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலகமெங்கும் கொரோனா வைராஸானது, நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகின்றது. பல நாடுகளில், கொரோனா வைரஸின் 2வது அலையானது பரவியுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகம் முழுவதும் தற்பொழுது வரை 4 கோடி 68 லட்சம் பேர் இந்த கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வைரஸானது, இங்கிலாந்து இளவரசர் முதல் இந்திய அரசியல் தலைவர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. பலரையும் இந்த வைரஸானது, கடுமையானப் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த வைரஸ் குறித்து தினமும் புதுப் புது அறிவிப்புகளை டெட்ரோஸ் தலைமையிலான உலக சுகாதார மையம் வெளியிட்டு வந்தது.

அந்த மையத்தின் தலைவர் டெட்ரோஸ், தற்பொழுது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் பழகிய நபருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள காரணத்தால், தனக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அவரால் மற்றவர்களுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்பதற்காகவும், இவ்வாறு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், இவ்வாறு நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே, கொரோனா வைரஸ் சங்கிலியினை நம்மால் உடைக்க முடியும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS