மழையுடன் விடைபெற்ற அத்திவரதர்!

19 August 2019 அரசியல்
athivaradhar.jpg

ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை, பக்தர்களுக்கு சயன நிலையிலும், நின்ற நிலையும் அருள்பாலித்த அத்திவரதர் ஆகஸ்ட் 17ம் தேதி அன்று, ஆகம பூஜைகளுடன் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் பள்ளி கொண்டார்.

இவரை இதுவரை, ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக, தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், காவலர்கள் தங்களுடையப் பணியினை சிறப்பாக செய்தனர் என, அம்மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையா கூறினார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதி யாகம் நடத்தப்பட்டது. பின் அத்திவரதருக்கு தைலக் காப்பு சாத்தப்பட்டது. பின்னர், இரவு சரியாக ஒன்பது மணிக்கு, அனந்தசரஸ் குளத்திற்கு தூக்கிச் செல்லப்பட்ட அத்திவரதர், அங்கு வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு 12.00 மணி அளவில், 80 பேர் மட்டுமே அனுமதிகப்பட்ட நிலையில், அனந்தசரஸ் குளத்தில், அவர் பள்ளிகொள்ளும் இடத்தில், 20 நாகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அத்திவரதர் குளத்திற்குள் பள்ளிக் கொண்டார்.

அவர் இருக்கும் குளத்திற்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி, சிசிடிவி கேமிரா மூலம் குளம் கண்காணிகப்பட்டு வருகிறது. மேலும், அவர் குளத்திற்குள் இறங்கியது முதல், காஞ்சிபுரத்தில் லேசானது முதல், மிதமான மழைப் பெய்து வருகிறது. இதனைப் பக்தர்கள் பரவசமாக, பக்தியுடன் பேசி வருகின்றனர். அடுத்து 2059ம் ஆண்டு தான், நம்மால் அவரை தரிசிக்க இயலும் என்பது சற்று வேதனையான விஷயம் தான்.

HOT NEWS