சர்ச்சைப் பேச்சு! விளக்கமளித்த குருமூர்த்தி!

26 November 2019 அரசியல்
auditorgurumurthy.jpg

தான் எவ்விதத் தவறான அர்த்தத்திலும் பேசவில்லை எனவும், ஓபிஎஸ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையாளர் ஆசிரியர் குருமூர்த்தி தற்பொழுது, ஓபிஎஸ் குறித்துப் பேசியதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். சசிகலாவை முதலமைச்சர் ஆக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் பதவியேற்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும், தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. அப்போ, ஓபிஎஸ்ஸ போய் நீங்க கொஞ்சம் போய், அங்கு துப்புறவா இருக்கா எனப் பாருங்க எனக் கூறியுள்ளனர். அதற்கு, என்னிடம் வந்த ஓபிஎஸ், சார் இந்த மாதிரி எல்லாம் என்னை சொல்றாங்க. நான் என்னப் பண்றதுன்னுத் தெரியல்லன்னு சொன்னார்.

அவர்கிட்ட நான் பேசிய முறையை, வெளியில் கூட முடியாது. நீங்கள்ளலாம் ஆம்பளையாயா ஏன் வெளியில இருக்கீங்கன்னு கேட்டேன். என்ன சார் பண்ணலாம் கேட்டார். நீங்க போய், அந்த சமாதில உட்காருங்க சார், ஏதாவது வழி பிறக்கும்னு சொன்னேன். அவ்வளவு தான். மற்றதெல்லாம் தானாக நடந்தது என்று, துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா கூட்டத்தில் சிறப்புறையாற்றினார்.

தான் பேசியதை முழுமையாகக் கேட்காமல், ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பேசுகின்றனர். ஓபிஎஸ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதிமுகவில், எனக்கு நன்றாகத் தெரிந்த நபர் என்றால், அது ஓபிஎஸ் மட்டும் தான். சசிகலாவிடம் இருந்து கட்சியினைக் காப்பாற்ற வேண்டும் எனப் பலரும் என்னிடம் கூறினர். இரண்டாக இருந்த அதிமுகவினை இணைத்ததில், எனக்கு மிகப் பெரிய பங்கு உண்டு எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்திக்கு நாவடக்கம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS