ஆஸ்திரேலிய தீயிணை அணைக்க சென்ற விமானம் விழுந்து விபத்து! மூன்று பேர் பலி!

23 January 2020 அரசியல்
australiafire211.jpg

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களாக, காட்டுத் தீயானது எரிந்து வருகின்றது. கிட்டத்தட்ட பல லட்சக்கணக்கான ஏக்கர் காடுகளும், நிலங்களும் தீயில் கருகி சாம்பலாகி உள்ளன. நூறு கோடிக்கும் அதிகமான விலங்குகள், இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. பல விலங்குகள் குடிப்பதற்கு நீரில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வீடுகளும் தீயில் கருகி சாம்பலாகி வருகின்றன.

இந்தத் தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ஆஸ்திரேலிய அரசாங்கம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது. தற்பொழுது 80க்கும் மேற்பட்ட இடங்களில், காட்டுத் தீயானது கொளுந்து விட்டு எரிந்து வருகின்றது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தாலும், காட்டுத் தீயானது கட்டுப்பாட்டிற்குள் வந்தபாடில்லை. இதனையடுத்து, தீயின் மீது ரசாயனம் தெளித்து அணைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றது. இதில் அமெரிக்க வீரர்களும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

ஹெர்குலஸ் சி 130 என்ற விமானத்தின் மூலம் நீர் தெளிக்கும் பணியில், அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் ஈடுபட இருந்தனர். அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில், கட்டுப்பாட்டு அறையுடன் இருந்து வந்த தொடர்பானது துண்டானது. இதனையடுத்து, விமானத்தினை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

அப்பொழுது, பறந்து கொண்டிருந்த விமானம், அப்பகுதியில் இருந்து மலையில் மீது மோதி, நொறுங்கி விழுந்துள்ளது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம், தற்பொழுது பரிதாபத்தினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, முறையான விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

HOT NEWS