ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ! சிவப்பு நிறத்தில் வானம்! பொதுமக்கள் அச்சம்!

06 January 2020 அரசியல்
australiafire.jpg

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயானது, அதிகமாக பரவி வருகின்றது. இதனால், பொது மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக, வானமானது சுமார் 13 கிலோ மீட்டர் அளவிற்கு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட காட்டு தீ விபத்தின் காரணமாக, சுமார் ஒரு லட்சம் பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு உள்ளனர். பல்லாயிரம் வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. இதுவரை இந்த தீ விபத்தின் காரணமாக, சுமார் 20 பலியாகி உள்ளனர்.

சுமார் 166 முறை இந்த தீ விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில், வானமானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது. 2700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தின் பொழுது, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தன்னுடைய குடும்பத்துடன் ஹவாய் தீவில் உல்லாசமாக இருந்துள்ளார். அதனால், ஆஸ்திரேலியா மக்கள் கடும் கோபம் அடைந்தனர்.

இதனை அறிந்த பிரதமர், அவசர அவசரமாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். தீயினால், பாதிக்கப்பட்ட இடத்தினையும் பொதுமக்களையும் சந்தித்தும் உள்ளார். அப்பொழுது, அவருடன் உரையாடிய பொதுமக்கள் அவருக்கு கைக் கொடுக்க முடியாது எனவும், உங்களுக்கு எங்கள் பகுதியில் இருந்து ஒரு வாக்கும் கிடைக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தற்பொழுது அங்குள்ள செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, சுமார் 50 கோடி உயிரினங்கள் அந்தக் காட்டுத் தீயின் காரணமாக அழிந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

HOT NEWS