இந்த மருந்தினைப் பயன்படுத்துங்கள்! ஆஸ்திரேலியா பரிந்துரை!

05 April 2020 அரசியல்
medicine1.jpg

கொரோனா வைரஸானது, உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றது. இதற்கு தற்பொழுது வரை, மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 60,000 கடந்துள்ளது.

இந்நிலையில், மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா உட்பட பல நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பல மருந்துகளானது பரிந்துரைக்கப்பட்டது. இதில், ஆன்ட்டிவைரல் ரிசர்ச் எனப்படும் ஆய்வு இதழிலில், புதிய மருந்து ஒன்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் மேற்கொண்ட ஆய்வில் இவர்மெக்டின் என்ற மருந்தினைப் பரிந்துரை செய்துள்ளனர். இந்த மருந்தானது, உடலில் பரவுகின்ற ஒட்டுண்ணிகள், நுண்ணுயிர் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை உடையது. இந்த மருந்தினை ஒரு முறைப் பயன்படுத்துவதன் மூலமே, நோயாளின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுதவாக கூறப்பட்டு உள்ளது.

இந்த மருந்தானது, ஹெச்ஐவி, ஜிகா வைரஸ், டெங்கு, இன்புளூயன்சா உள்ளிட்ட நோய்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் எனவும், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு பரிந்துரைத்துள்ளது.

HOT NEWS