செப்டம்பர் முதல் எரியும் தீ! நேற்று மழையால் குறைந்தது!

07 January 2020 அரசியல்
australiabushfire.jpg

ஆஸ்திரேலியாவின், வடகிழக்கு மாகாணங்களான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா போன்ற மாகாணங்களில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீயானது கொளுந்து விட்டு எரிந்து வருகின்றது.

கிட்டத்தட்ட 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள், இந்தத் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளதால், ஆஸ்திரேலியாவே கவலையில் ஆழ்ந்துள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் தீயினை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறிவிட்டது என, தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், குற்றம் சாட்டி வருகின்றனர்.

கங்காரு, ஈமு கோழிகள், கோலா கரடி போன்றவைகள் ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான விலங்குகள் ஆகும். அவை, தற்பொழுது பெருமளவில் அழிந்துவிட்டதாக கூறப்படுகின்றது. தண்ணீரை பெரும்பாலும் குடிக்காமல், யூகலிப்டஸ் இலையினை உண்டு வாழும் கோலா கரடியோ பொதுமக்களிடம், பாட்டிலில் குடிநீர் வாங்கிப் பருகி வருகின்றது. இந்த வீடியோக்கள் பார்ப்பவர்களை கண்ணீர் விட வைக்கின்றது. தொடர்ந்து எரிந்து வரும் தீயின் காரணமாக, அப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளன.

பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் இருந்த காடுகள் சாம்பலாகி விட்டன. இந்த தீயின் காரணமாக எழுந்த புகையினால், பெருமளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது. ஆஸ்திரேலியாவில் தீ எரிந்து வரும் பகுதிகளில், சுமார் 45 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் மிகுந்து காணப்படுகின்றது.

இராணுவம் தற்பொழுது தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவுப் பெரியத் தீயிணை அணைக்க இராணுவத்தால் மட்டும் முடியாது என்பதால், முப்படைகளும் தற்பொழுது இறங்கியுள்ளன.

இந்நிலையில், நேற்று இந்த தீயினால் வாடிய ஆஸ்திரேலியாவிற்கு இயற்கைக் கருணை காட்டியது. அங்கு திடீரென்று பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள விலங்குகள் ஈரமான இடத்தில் வந்து நின்ற விளையாட ஆரம்பித்து விட்டன. சில மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக, தீயானது மற்ற இடங்களில் பரவாமல் தற்பொழுது இருக்கின்றது. மேலும், பல இடங்களில் தீயானது குறைந்தது. இதனால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HOT NEWS