ஆஸ்ட்ரியா தலைநகர் வியன்னாவில் தீவிரவாதிகள் தாக்குதல்!

03 November 2020 அரசியல்
austriaattack.jpg

ஆஸ்ட்ரியா தலைநகர் வியன்னாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியக் கொடூரத் தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அங்கு கடந்த வாரம், இஸ்லாமிய மதவெறித் தாக்குதல் நடைபெற்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆஸ்ட்ரியா நாட்டில் தற்பொழுது ஊரடங்கானது முடிவடைந்தது. அப்பொழுது, அங்கு பொதுமக்கள் இரவு வெளியில் நடமாடி வந்தனர். சரியாக 8.30 மணியளவில், ஆஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில் முகமூடி அணிந்த நபர்கள், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சாலையில் சென்றவர்களை சுட்டனர். அதில், படுகாயமடைந்த 2 நபர்கள் பலியாகினர்.

மேலும், இந்த கொடூரத் தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிரவாதிகளைப் பிடிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது. இது தற்பொழுது உலகளவில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS