ஆட்டோமேசனால் வேலையிழப்பு அதிகரிப்பு! கலக்கத்தில் கார்ப்போரேட் ஊழியர்கள்!

30 April 2019 தொழில்நுட்பம்
automation-end-game.jpg

தொடர்ந்து உலகம் முழுக்க ஆட்டோமேசன் எனப்படும், தொழில்நுட்பம் அதிகமாக அனைத்துக் கம்பெனிகளிலும், பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

ஹார்வெர்ட் பல்கலைக்கழகம் நடத்தியக் கருத்துக் கணிப்பில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் கருத்துக் கணிப்பின் படி, அடுத்த 20 ஆண்டுகளில், தற்பொழுது வேலைப் பார்க்கும் மக்கள் தொகையில், பாதிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவில் ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள், வேலையில்லாமல் வீட்டில் உள்ளனர். இவர்களின் நிலை முற்றிலும் மோசமாகி விடும்.

குறிப்பாக, கணிணித்துறை, ஆட்டோமொபைல் துறையில் அதிக அளவில், இந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இதனால், மனிதர்களின் தேவை வேலை செய்யும் இடங்களிலும், தொழிற்சாலைகளிலும் குறையும் எனும், அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

HOT NEWS