இந்தியாவில் 2030ம் ஆண்டில், ஐந்து கோடிக்கும் அதிகமானோர், வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வின் முடிவிகள் தெரிவிக்கின்றன.
விவசாயம், போக்குவரத்து, மீன்பிடிப்பு மற்றும் ஐடி போன்ற துறைகளில், ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இந்தியாவில் தற்பொழுது வேலை செய்யும் பெண்களில் ஒரு கோடி இருபது இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் வேலை வாய்ப்பினை இழப்பர் எனவும், நாலு கோடியே 40லட்சம் பேர் வேலை வாய்ப்பினை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன என, ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்கன்சே குளோபல் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஏற்கனவே அதிகமாக உள்ளது. மேலும், வளர்ச்சியடைந்த நிறுவனங்கள் மட்டுமல்ல, வளரும் நிறுவனங்களுமே ஆட்டோமேஷன் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்தியாவின் ஐடி நிறுவனங்களில், கிட்டத்தட்ட 50 சதவீத பெரிய நிறுவனங்கள், பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 2025ல் பெரிய நிறுவனங்களில், 50% அதிகமான வேலையை, ஆட்டோமேஷன் மேற்கொள்ள உள்ளன. இது 2030ல் அதிகமாகும் என்பதால், இவ்வளவு பேர் வேலை வாய்ப்பின்மையை சந்திக்க உள்ளனர்.