எழ முடியாத நிலையில் ஆட்டோமொபைல் தொழில்! சிக்கலில் ஊழியர்களின் எதிர்காலம்!

09 September 2019 தொழில்நுட்பம்
carfactory.jpg

இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழில், முக்கியமானத் தொழில்களில் ஒன்றாகவே உள்ளது. அதனை நம்பி பல லட்சக்கணக்கான ஊழியர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது இந்தியா மட்டுமின்றி, ஆசிய முழுவதும் 7% லாபத்தை அளித்து வருகிறது.

இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையின் காரணமாக, பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்களுடைய பணியாட்களை வேலையிலிருந்து நீக்கியும், வேநாட்களில் விடுமுறையையும் அறிவித்து உள்ளன. விற்பனை சரிவு, அதிக வரியின் காரணமாக, பல ஆலைகள் மூடும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம், தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் டிரக் மற்றும் பேருந்துகளின் உற்பத்தி, சுமார் 39% குறைந்துள்ளதாகவும், அதே போல், இரு சக்கர வாகனங்களின் உற்பத்தியானது 22% குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்ச்சியாக, பத்தாவது மாதமாக வாகன உற்பத்தி, 31.57% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 12 லட்சமாக இருந்த மோட்டாள் சைக்கிள் விற்பனை, தற்பொழுது 9 லட்சத்து 37 ஆயிரமாக, குறைந்துள்ளது. தொடர்ந்து வாகன உற்பத்திக் குறைந்ததைத் தொடர்ந்து, மாருதி மற்றும் சுசூக்கி நிறுவனத்தில் பணிபுரிந்த வேலையாட்களை நீக்கியும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின்கட்கரி முன்னிலையில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது, உதிரி பாகங்களின் வரியை குறைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள், நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டதாகவும், அதனை நிதியமைச்சரிடம் கட்கரி கூறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எது எப்படியோ, வாகன உற்பத்தி ஆரம்பித்தால் மட்டும் போதாது, விற்பனை இல்லாமல் வாகனத்தை உற்பத்தி செய்து ஒரு பயனும் இல்லை.

SOURCE:THE WIRE

HOT NEWS