அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 75 வீரர்கள் காயம்! 14 காளையை அடக்கிய வீரர்!

15 January 2020 அரசியல்
jallikkatu.jpg

இன்று பொங்கல் திருவிழாவானது, தமிழக மக்களால் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இதில், பல மாவட்டங்களில், ஜல்லிக்ட்டுப் போட்டியானது நடத்தப்பட்டு வருகின்றன.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது, வருகின்ற 17ம் தேதி வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது. மேலும், நாளை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று காலை மதுரை அவனியாபுரத்தில், பிரசித்திப் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் மொத்தம் 700 காளைகள் அவிழ்க்கப்பட்டன. வனவிலங்குப் பாதுகாவலர்கள், மாவட்ட ஆட்சியர், போலீசார் பார்வையில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, காளையர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு பலவிதமான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், அவைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.

இன்று காலையில், பங்கேற்கும் வீரர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், வீரர்கள் அனுமதிக்கப்பட்டன. முதலில் கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்பட்டன. பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியினைச் சேர்ந்த விஜய் என்பவர் 14 காளைகளை அடக்கி அசத்தினார். அவருக்கு, மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பையானது பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில், 75 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு, உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

HOT NEWS