அவெஞ்சர்ஸ் படம் தற்பொழுது, உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பாக்ஸ் ஆபிசில் பிடித்துள்ளது. மார்வெல் நிறுவனம் தயாரித்து, ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுக்க, அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் கடைசி பாகம் வெளியானது. இத்திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஓடிப் பட்டையைக் கிளப்பியது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க பல வசூல் சாதனைகளைச் செய்தது இந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.
இந்நிலையில், சென்ற வாரம், 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே அவதாரை விட, குறைவாக வசூல் செய்திருந்தது. இந்நிலையில், தற்பொழுது உலகின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருந்த, அவதார் திரைப்படத்தினை மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்துள்ளது.
அவதார் திரைப்படம் 2.78 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது வரை, அவெஞ்சர்ஸ் திரைப்படம் 2.79 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது.
அவதாரை விட 0.1மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்து அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் அவதாரின் சாதனையை முறியடித்துள்ளது.
இதுவரை கடந்த பத்து ஆண்டுகளாக, முதலிடத்தில் இருந்த வந்த அவதார் திரைப்படம் தற்பொழுது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.