அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் நடித்தப் பிரபல நடிகர், தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
நடிகர் ஜெர்மி ரின்னரைப் பற்றி, நம் அனைவருக்கும் தெரியும். அவெஞ்சர்ஸ் படத்தில், ஹாக் ஐ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து உலகம் முழுக்கப் பிரபலம் அடைந்தவர்.
48 வயதுடைய அவர், குடித்துவிட்டு, போதையில், கையில் இருந்த துப்பாக்கியால் தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், கையில் இருந்த துப்பாக்கியால், வீட்டின் மேல் கூரையைப் பார்த்துச் சுட்டுள்ளார். இதனால், தன்னுடை அறையில் உறங்கிக் கொண்டு இருந்த அவருடைய ஆறு வயது குழந்தை எழுந்து வந்து, தந்தையைப் பார்த்து பயந்துள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அவருடைய முன்னாள் மனைவி, லாஸ் ஏஜ்சலஸ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரபல நடிகர் இப்படி குடித்துவிட்டு, தன்னுடைய முன்னாள் மனைவியும் மாடலுமான சோனி பேச்சோ தன்னை கொலை செய்வதாக அவர் மிரட்டியுள்ளார் எனவும் புகார் அளித்துள்ளார். இது ஹாலிவுட்டில் தற்பொழுது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.